இலங்கை
புதுமணத் தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன்திட்டம்!

புதுமணத் தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன்திட்டம்!
இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும் இளம் தலைமுறையினரின் கனவை இந்தத் திட்டம் நிறைவேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.