பொழுதுபோக்கு
போட்டு வாங்குறியா? உன்ன தவிர எல்லாம் நல்ல நடிகை தான்; டிவி ஷோவில் சங்கீதாவுக்கு செக் வைத்த பாலா!

போட்டு வாங்குறியா? உன்ன தவிர எல்லாம் நல்ல நடிகை தான்; டிவி ஷோவில் சங்கீதாவுக்கு செக் வைத்த பாலா!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குனர் பாலா எதார்த்தமான கதைகளையும் எளிமையான திரைப்படங்களையும் தனது படைப்பின் மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் இயக்கிய பல படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டி வருவது வழக்கமாகி வருகிறது.இந்தியாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலுமகேந்திராவிடம் வித்தையை கற்று உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குனர் பாலா, தனது முதல் படமான சேதுவை பல தடைகளையும் தாண்டி தனது வித்தியாசமான இயக்கத்தின் மூலம் உருவாக்கி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.சேது திரைப்படம் வெளியாகி ஓரிரு நாட்கள் குறைந்த அளவிலேயே மக்கள் வந்து படத்தைப் பார்த்த நிலையில் விமர்சனங்களின் வாயிலாக பலரும் இந்தப் படத்தைப் பற்றி அறிந்து பின் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படத்தை பார்த்து தூக்கி வைத்து கொண்டாடினர். இவ்வாறு சற்றும் எதிர்பாராத மிகப் பெரிய வெற்றியை கொடுத்த சேது திரைப்படம் பாலாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அதேசமயம் நடிகர் விக்ரம் சேது படத்திற்கு முன்பு பல படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாநாயகனாகவும் நடித்து வந்த நிலையில் அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வந்தது. இவ்வாறு சந்தித்த பல தோல்விகளுக்குப் பிறகு சேது படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.இவ்வாறு தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான கதையின் மூலம், சூப்பர் ஹிட் திரைப்படத்தைக் கொடுத்த பாலாவிற்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே இன்று வரை இருந்து வருகிறது. விக்ரமை தொடர்ந்து இவர் சூர்யாவிற்கும் தனது படங்களின் மூலம் மிகப்பெரிய திருப்புமுனையை அமைத்தவர் இயக்குனர் பாலா.நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கிய அந்த காரசாரமான நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாவிடம் பல கேள்விகளை முன்வைத்த சங்கீதா உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகை பூஜா எனக் கூறியுள்ளார். அதற்கு காரணம் “நான் கடவுள்” திரைப்படத்தில் பூஜா நடித்திருந்த கதாபாத்திரம் எவ்வளவு கடினமானது என எனக்கு நன்றாகவே தெரியும்.அதில் பூஜா கண்களில் அணிந்திருந்த வைய்ட் கலர் லென்ஸ் கண் பார்வையை முற்றிலும் மறைத்த நிலையிலும், மலை உச்சியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி ஒன்றில் கரணம் தப்பினால் மரணம் என்ற இக்கட்டான பாதையிலும் தான் லெப்ட் ரைட் என சொல்ல சொல்ல அதை கவனமாக கேட்டு தன் உயிரை பணையம் வைத்து அந்த காட்சியில் பூஜா நடித்திருந்தார்.நான் சற்று மாற்றி சொல்லியிருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் என் மீது நம்பிக்கை வைத்து அந்த காட்சியில் மிகச் சிறப்பாக நடித்து கொடுத்த பூஜா தான் எனக்கு பிடித்த நடிகை என மனம் திறந்துள்ளார் இயக்குனர் பாலா. அந்த நிகழ்ச்சியில் பாலாவின் வார்த்தைகளைக் கேட்ட பூஜா, அந்த இயக்குனர் தன்னை பாராட்டுவதை கேட்டு ஆகாயத்தில் பறந்தவாறு மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருந்தாராம்.