இலங்கை
மட்டக்களப்பு பெண்ணின் மோசமான செயல்

மட்டக்களப்பு பெண்ணின் மோசமான செயல்
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு பிறைந்துறைச்சேனையிலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைபொருளுடன் பொலிஸார் கைது செய்தனர்.
கைதான பெண் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.