இலங்கை
மன்னாரில் காற்றாலை மின்திட்டம்; எதிராகக் கடையடைப்பு!

மன்னாரில் காற்றாலை மின்திட்டம்; எதிராகக் கடையடைப்பு!
மன்னாரில் காற்றாலைகளை அமைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் செயற்பாட்டைக் கண்டித்து நேற்றுக் கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது.
காற்றாலைக்குத் தேவையான உபகரணங்களுடன் வந்த வாகனங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் இடைமறித்து போராட்டம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர். இந்தப் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. இதன் ஒரு பகுதியாகவே, கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.