இலங்கை
மஹிந்த குடும்பத்திற்கு பேரிடி; கைதான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

மஹிந்த குடும்பத்திற்கு பேரிடி; கைதான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து முறைகேடான வகையில் அரசாங்கத்திடமிருந்து நட்டஈடு பெற்ற குற்றச்சாட்டில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.