இலங்கை
மாமியாரும் மருமகளும் செய்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் பொலிஸார்

மாமியாரும் மருமகளும் செய்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் பொலிஸார்
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டே பகுதியில், தனமல்வில பொலிஸாரால் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மற்றும் அவரது மருமகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில, கித்துள் கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது, கசிப்பு பாட்டில்கள் 46 மற்றும் கசிப்பு பாக்கெட்டுகள் 13 கைப்பற்றப்பட்டது.
இக் கைது நடவடிக்கையின் போது 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக இடையூறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் இருவரையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.