Connect with us

சினிமா

மீனாவை வைத்து காரியம் சாதிக்கும் விஜயா..! கோலாகலமாக சீதா வீட்டில் நடக்கும் கொண்டாட்டம்..

Published

on

Loading

மீனாவை வைத்து காரியம் சாதிக்கும் விஜயா..! கோலாகலமாக சீதா வீட்டில் நடக்கும் கொண்டாட்டம்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா பார்வதி கிட்ட இனிமேல் நல்ல காரியம் எல்லாம் செய்ய வேணும் என்கிறார். மேலும் முதல் கட்டமா என்ர வீட்டில தான் அந்த நல்ல காரியத்தை தொடங்கப் போறேன் அத வீடியோ எடுத்து கோகிலாவுக்கு அனுப்பி எப்புடியாவது டாக்டர் பட்டத்தை வாங்கிடணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பார்வதி இவ இனி கொஞ்ச நாளைக்கு என்னெவெல்லாம் கூத்து பண்ணப் போறாளோ தெரியலையே என்று தன்ர மனசுக்குள்ள சொல்லுறார்.இதனை அடுத்து விஜயா அண்ணாமலையை பார்த்து பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய்யப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை அது சரி ஆனா எல்லாரும் பயப்படுற மாதிரி எதையும் செய்திடாத என்கிறார். அதைத் தொடர்ந்து பார்வதி விஜயா வீட்ட வந்து நம்ம பிளானை ஆரம்பிச்சிடலாமா என்று கேட்கிறார். பின் விஜயா மீனாவைக் கூப்பிட்டு தனக்கு பக்கத்தில வந்து உட்காரச் சொல்லுறார். அதை பார்த்த ரோகிணி தன்னை தவிர இந்த வீட்டில எல்லாருக்கும் நல்ல மரியாதை இருக்கு என்கிறார். பின் விஜயா மீனாவை தங்கம் என்று கூப்பிட்டு புடவை வாங்கிக் கொடுக்கிறார். அதைப் பார்த்த மீனா ஷாக் ஆகுறார். இதனை அடுத்து முத்து எனக்கு தல சுத்துது கொஞ்சம் தண்ணி கொண்டுவந்து கொடு என்று ரவியை பார்த்துச் சொல்லுறார். பின் விஜயா பார்வதியைப் பார்த்து வீடியோ எடுத்திட்டியா என்று கேட்கிறார். பார்வதி ஓம் என்றவுடனே விஜயா மீனா கிட்ட கொடுத்த புடவை எல்லாத்தையும் திரும்ப வாங்கிறார். அதைப் பார்த்து ரோகிணி சந்தோசப்படுறார். அதனை அடுத்து முத்து விஜயாவை பார்த்து நீங்க என்னதான் செய்து கொண்டிருக்கீங்க என்று கேட்கிறார். பின் அருணோட அம்மா மீனா அம்மாவைப் பார்த்து சீதாவுக்கு தாலி பிரிச்சுப் போடுற நிகழ்வை செய்யணும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன