இலங்கை
முதலிரவில் புதுப்பெண் தற்கொலை ; உறவினர்கள் அதிர்ச்சி

முதலிரவில் புதுப்பெண் தற்கொலை ; உறவினர்கள் அதிர்ச்சி
இந்தியா – ஆந்திராவில் முதலிரவில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகையில்,
ஆந்திர மாநிலம் சேர்ந்த ஹர்ஷிதா (வயது 22). என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம்(4) பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் பின்னர் சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற புதுமணப்பெண் கதவை பூட்டி நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர்.
கதவை பெண் திறக்காததை அடுத்து கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை கணடு உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் யுவதி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் புது மணபெண்ணின் தற்கொலைக்காக காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.