இந்தியா
மேக வெடிப்பால் திடீர் பெருவெள்ளம்; பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!

மேக வெடிப்பால் திடீர் பெருவெள்ளம்; பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது.