விளையாட்டு
ரைட் கார்னரின் நங்கூரம்… தமிழ் தலைவாசை தாங்கிப் பிடிப்பாரா சாகர் ரதி?

ரைட் கார்னரின் நங்கூரம்… தமிழ் தலைவாசை தாங்கிப் பிடிப்பாரா சாகர் ரதி?
புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியில் களமாடும் வீரர்களில் முக்கிய வீரராக வலம் வருபவர் சாகர் ரதி. இந்திய அணியின் டிஃபென்டரான இவர், தனக்கு 19 வயது இருக்கும் புரோ கபடி லீக் தொடரில் அறிமுகமானார். வெகு சீக்கிரமாகவே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 7-வது சீசனில் களமாடி இருந்தாலும், அவர் ஆடிய 8-வது சீசனில் 82 டேக்கில் புள்ளிகளை எடுத்து அசத்தினார். தொடர்ந்து அணிக்கு ரைட் கார்னரின் நங்கூரமாக திகழ்ந்த சாகர் ரதி, 9-வது சீசனில் தமிழ் தலைவாசின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சீசனில் பயிற்சியாளர் ஆஷன் குமார் உதவியுடன் சிறப்பாக ஆடியது தமிழ் தலைவாஸ். மேலும், முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதில் சாகர் ரதியின் பங்கு மெச்சத் தக்கதாக இருந்தது. புரோ கபடி தொடரில் இதுவரை 72 போட்டிகளில் களமாடி இருக்கும் சாகர் ரதி 379 டேக்கில் புள்ளிகளை எடுத்துள்ளார். அவரின் வெற்றி விகிதம் 53.3 ஆக இருக்கும் சூழலில், 24 சூப்பர் டேக்கில், 20 ஹை 5-களை எடுத்துள்ளார். சீசன் 10 மற்றும் 11-ல் அணியின் கேப்டனாக தொடர்ந்த சாகர் ரதி, தமிழ் தலைவாஸ் அணி கோப்பை கனவை நெருங்க கடுமையாக போராடி வருகிறார். இந்த சீசனில் வலுவான வீரர்களும், பயிற்சியாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் கோப்பையை முத்தமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. A post shared by Tamil Thalaivas (@tamilthalaivas)தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் மோதல் 12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.