இலங்கை
80 அடி நீள இழுவைப் படகுடன் கைதான இந்தியர்கள்

80 அடி நீள இழுவைப் படகுடன் கைதான இந்தியர்கள்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 10 பேரை பத்தலன்குண்டு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய இழுவைப் படகு 80 அடிக்கும் அதிக நீளமான தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும்.
குறித்த படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், ஜி.பி.எஸ் வரைபடங்கள், மீன்களைக் கண்டறியும் கருவிகள் போன்றவை இருந்ததாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.