இலங்கை
A35 வீதி பாலத்தை சேதப்படுத்திய வாகனம்

A35 வீதி பாலத்தை சேதப்படுத்திய வாகனம்
பரந்தன் – முல்லைத்தீவு A35 வீதியின் கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியில் பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் பாலத்தை சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டிப்பர் வாகனம் வீதியில் பயணித்த இராணுவ வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06) மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் க கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.