இலங்கை
அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
அரியாலை – செம்மணிப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.
45 நாள்களைக் கொண்ட இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் மூன்று பகுதிகளாக இடம்பெற்றுவரும் நிலையில், இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகளே இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதியளவில் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.