உலகம்
அமெரிக்கா முழுவதும் விமான சேவையை நிறுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்!

அமெரிக்கா முழுவதும் விமான சேவையை நிறுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்!
அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விளங்குகிறது.
இந்த நிறுவனம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல விமானங்களை அவசரமாக தரையிறக்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து டென்வர், நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
சமீப காலமாக தொழில்நுட்ப கோளாறு அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இதனால் அதன் விமானங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]