இலங்கை
அமெ. வரி குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி!

அமெ. வரி குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது விசேட உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை ட்ரம்ப் 20 வீதமாக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி விளக்கினார்.
இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு திறமையான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர விமலேந்திர ராஜன், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கிய அமெரிக்க தூதுவர் ஆகியோரின் பங்கேற்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.