இலங்கை
இடமாற்றச்சிக்கலுக்கு தீர்வு கிட்டாவிட்டால் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இடமாற்றச்சிக்கலுக்கு தீர்வு கிட்டாவிட்டால் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
மருத்துவர்களின் இடமாற்றப் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஹன்சலால் விஜேசூரிய தெரிவித்துள்ளதாவது அமைச்சுடன் பலமுறை பேச்சுக்கள் நடத்தியும் இடமாற்றப்பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகத் திருப்திகரமான தீர்வுகள் எட்டப்படவில்லை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர் – என்றார்.