இந்தியா
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், பயங்கரவாதக் குழுவிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற உளவுத்துறை தகவலைக் காரணம் காட்டி, இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.