Connect with us

பொழுதுபோக்கு

‘உங்க கூட நடிக்கவே மாட்டேன்’: ரஜினிகாந்த் நிராகரித்த நடிகர்; பின்னாளில் பெரிய இயக்குனர்!

Published

on

Rajinikanth Parthiban

Loading

‘உங்க கூட நடிக்கவே மாட்டேன்’: ரஜினிகாந்த் நிராகரித்த நடிகர்; பின்னாளில் பெரிய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தாயரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பார்த்திபனுடன், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கதை கேட்ட ரஜினிகாந்த், அவரின் ஒரு படத்தை பார்த்துவிட்டு, இனிமேல் உங்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.இயக்குனர் பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக்கொண்டவர் தான் பார்த்திபன். பல போராட்டங்களுக்கு பிறகு புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், இந்த படத்தை தொடங்கும்போதே பெரிய பிரச்னைகளை சந்தித்துள்ளார். 3 முறை இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு, 2-3 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், படத்தின் ஹீரோயின் சீதா மட்டும் தான் இந்த படத்தில் தெரிந்த முகம் மற்ற அனைவரும் புதுமுகம் என்பதால், படத்திற்கான எதிர்ப்பு அதிகம் இல்லாம் இருந்துள்ளர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகும்போது விகடன் நிறுனர் தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு, படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் படத்தை பார்த்த அவர், தனக்கு பணமே வேண்டாம் என்று படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படம் வெளியான அதே நாளில் வெளியான புதிய பாதை திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து பார்த்திபனுக்கு புகழ் சேர்த்தது. தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருதுகளை வென்ற இந்த படம், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதன்பிறகு பொண்டாட்டி தேவை என்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட பார்த்திபன் அடுத்து தானே தயாரிப்பாளராக களமிறங்கிய சுகமான சுமைகள் என்ற படத்தை இயக்கியிருந்தார்.குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை என் குடும்பம் மட்டும் தான் பார்த்தது. படம் தோல்வியாக அமைந்தது. சரி விட்டதை பிடிக்க வேண்டும் என்று அடுத்து உள்ளே வெளியே படத்தை இயக்கினேன். அந்த படத்தில் முதலில் நடித்தவர் சுகன்யா. ஆனால் 3 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அதன்பிறகு அப்போது ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவரை படத்தில் நடிக்க வைத்தேன். படம் முழுவதும் டபுள் மீனிங் டைலாக்ஸ் தான்.படப்பிடிப்பு நடத்தும்போது கொஞ்சமாக இருந்தது டப்பிங்கில் அதிகமாக வந்தது. ஆனால் டபுள்மீனிங் டைலாக் என்பது ஒன்றும் இல்லை. இது ஒரு வகையாக படம் அவ்வளவு தான். படமும் பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு நானும் ரஜினி சாரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அன்று இரவு பேசிவிட்டு, அடுத்த நாள் உள்ளே வெளியே படத்தை பார்க்க அவரை அழைத்து சென்றேன். படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு போனவர் மறுநாள் என்னை அழைத்தார்.நான் அவரை போய் சந்தித்தபோது, என்ன ஸ்டைல் பண்ணிருக்கீங்க, இனிமேல் உங்க கூட என்னால் நடிக்க முடியாது. நான் ஏமாற தயாராக இல்லை என்று கூறினார். அதனால் இந்த படம் நடக்காமல போனது என்று பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்  பார்த்திபன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன