இலங்கை
எதிர்கட்சியினரின் கனவு ஒருபோதும் நனவாகாது – ஜனாதிபதி!

எதிர்கட்சியினரின் கனவு ஒருபோதும் நனவாகாது – ஜனாதிபதி!
எதிர்க்கட்சி பொருளாதாரத்தின் வீழ்ச்சி குறித்து ஒரு பேரழிவு கனவு காண்கிறது என்றும், இந்த பேரழிவு கனவு ஒருபோதும் நனவாகாது என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08.07) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிறகு இந்த சரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான், வழக்கமாக ஊடக சந்திப்புகளை நடத்தும் மனிதர்கள் கொழும்பு மீது குண்டு வீசப்படும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த நேரத்தில், எங்கள் இராணுவத் தளபதிகள் பாகிஸ்தானில் இருந்தனர்.
அது நடக்கவில்லை. அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு அமெரிக்க வரிக் கொள்கையால் நமது பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதுதான்.
அதனால்தான் நமது பொருளாதாரத்தில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற கொடூரமான கனவை நீங்கள் கனவு காண்கிறீர்கள். அந்த பேரழிவு கனவு நனவாகாது. அதை அப்படியே விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை