பொழுதுபோக்கு
என் ஜாதிக்காரன் படம்; முழுக்க முழுக்க நகைச்சுவை தான்: பட விழாவில் ரோபோ சங்கர் பேச்சு

என் ஜாதிக்காரன் படம்; முழுக்க முழுக்க நகைச்சுவை தான்: பட விழாவில் ரோபோ சங்கர் பேச்சு
சின்னத்திரையில் காமெடி கலைஞராக அறிமுகமாகி, பின்னாளில் சினிமாவில் நடிகராக உருவெடுத்த ரோபோ சங்கர், ‘சொட்ட சொட்ட நனையுது’ என்ற படத்தின் நிகழ்ச்சியில், இது என் ஜாதிக்காரன் படம் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, அறிமுக நடிகை ஷாலினி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு, ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராஜாகதை வசனம் எழுதியுள்ளார். காமெடி அம்சங்களுடன் இந்த படத்திற்காக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இளம் வயதில் தலைமுடி இல்லாமல் சொட்டை தலையுடன் இருக்கும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சம்பவங்களை காமெடியாக சொல்லும் படம் தான் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்துது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனிடையே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், இந்த படத்தின் இயக்குனர் ஒரு குழந்தை மாதிரி. உண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 18 நாட்களில் முடித்தோம். இது உண்மையில் என் ஜாதிக்காரன் படம். நகைச்சுவை ஜாதிப்படம். முழுக்க முழுக்க நகைச்சுவை தான். நீங்கள் கலக்கப்போவது யாரு எபிசோட்டை எப்படி பார்த்து எஞ்சாய் பண்ணுவீங்களோ அதேபோல் இந்த படம் இருக்கும். நான் பல சினிமா நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறேன். ஆனால் பலரும் கைத்தட்டி ரசித்தது இந்த மேடை தான்.”இது என் ஜாதிகாரனோட படம்”… சொட்ட சொட்ட நனையுது பட விழாவில் நகைச்சுவையாக சர்ச்சையை கிளப்பிய நடிகர் ரோபோ சங்கர்#chennai | #sottasottananaiyuthu | #robosankar | #polimernews | pic.twitter.com/kEqQ7k6MHdஇசை வெளியீட்டு விழாவுக்கு பல இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களால் வெகுநேரம் பேச முடியுமா என்று யோசித்தேன். ஆனால், அழுகு தமிழில் அற்புதமாக பேசுகிறார்கள். 6 படங்கள் நடித்துவிட்டு ஒரு ஹீரோ தனது இமேஜ்ஜை உடைத்து இந்த படத்தில் நடித்துள்ளார். அதே கெட்டப்பில் தான் இங்கும் வருவேன் என்று அடம் பிடித்து வந்திருக்கிறார். அதற்காக மிகப்பெரிய கைத்தட்டல் என்று கூறியுள்ளார்.