இலங்கை
காதல் கைகூடாததால் உயிரை மாய்த்த பதின்மவயது மாணவி

காதல் கைகூடாததால் உயிரை மாய்த்த பதின்மவயது மாணவி
மொனராகலையில் காதல் கைகூடாததால் பதினம் வயது மாணவி உயிரியை மாய்த்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கல்ல 16வது மைல்கள் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியின், தாய் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் சிறுமி, தனது பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் மாணவி அப்பகுதியில் இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
அந்த இளைஞன் மாணவிக்கு கைத்தொலைப்பேசி ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இந்த விவகாரம் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து அவர் தனது மகளை எச்சரித்ததுடன் , கைத்தொலைபேசியை பிடுங்கி உடைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி பாட்டியுடன் வீட்டில் தனியாக இருக்கும் போது படிப்பதாக கூறி அறையின் கதவை மூடிக்கொண்டுள்ளார்.
நீண்டநேரமாகியும் பேத்தி வெளியே வராமையால், அச்சமடைந்த பாட்டி, கதவை தட்டியுள்ளார்.
கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மாணவி கிடந்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் சிறுமையை மீட்டு உடனடியாக அவரை மீட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி எழுதிய கடிதமொன்று அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக. தெரிவித்த மொனராகலை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.