இலங்கை
கிளிநொச்சியில் விபத்து குடும்பத்தலைவர் பலி!

கிளிநொச்சியில் விபத்து குடும்பத்தலைவர் பலி!
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார் .
ஏ-9 வீதியில், கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கப்ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதிலேயே விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.