இலங்கை
குடும்பஸ்தர் ஒருவர் மாயம் ; தேடும் பணி தீவிரம்

குடும்பஸ்தர் ஒருவர் மாயம் ; தேடும் பணி தீவிரம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து வயது 55 உடையவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை 10.57 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என காணாமல் போனவரின் மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் காணாமல் போன வேலு மருதமுத்து உடுத்தி இருந்த உடை பாதணி என்பவற்றை கண்டு, நீர்த்தேக்கத்தில் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.