இலங்கை
கையூட்டுப் பெற்ற பொலிஸ் கைது!!!

கையூட்டுப் பெற்ற பொலிஸ் கைது!!!
கீர்த்திபண்டாரபுரப் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அலுவலர் ஒருவர். 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தகர் ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வலப்பனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.