இலங்கை
சட்டச்சிக்கல்கள் தீர்ந்தால் தேர்தலை உடன் நடத்தலாம்; தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

சட்டச்சிக்கல்கள் தீர்ந்தால் தேர்தலை உடன் நடத்தலாம்; தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
எல்லை நிர்ணயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அதற்கு இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இந்தச் சட்டச்சிக்கல்கள் தீர்க்கப்படும் போது மாகாணசபைத் தேர்தலை எந்தச் சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுதயாராக உள்ளது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல்கள் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலோபாயத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி புதியசட்டதிட்டங்களைக்கொண்டு வருதல், நவீன தொலைத் தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப
எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர் இடாப்பில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற பலவிடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.