இலங்கை
சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 1558கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 1558கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!
சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட 558கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி வவுனியா மாநகரசபையால் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட போது சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபைக்குப் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்தச் செயல் முறியடிக்கப்பட்டது. அதனைக் கொண்டுவந்த நபர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.