உலகம்
சந்திரனில் நீரை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள் – மனித வாழ்வுக்கான புதிய வாயிலாக!

சந்திரனில் நீரை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள் – மனித வாழ்வுக்கான புதிய வாயிலாக!
சீன விஞ்ஞானிகள் சந்திரனில் இருந்து முதல் முறையாக நீரை உருவாக்கி மகத்தான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளனர். Chang’e-5 பணி மூலம் கொண்டுவரப்பட்ட சந்திர மண்ணில் ஹைட்ரஜன் செறிவுள்ளதால், அதனை 1,200 K க்கும் அதிக வெப்பத்தில் சூடாக்கியபோது நீராவி உருவாகிறது.
ஒரு டன் சந்திர மண் மூலம் 76 கிலோ வரை நீர் பெற முடிந்துள்ளது – இது 50 நபர்களுக்கு ஒரு நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு!
இந்த கண்டுபிடிப்பு சந்திரனில் மனித வாழ்வை தக்கவைக்க உதவுகிறது – குடிநீர், ஆக்சிஜன், எரிபொருள் மற்றும் விவசாயம் என அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.
2035-ஆம் ஆண்டுக்குள் சந்திர ஆய்வுக் கூடம், 2045-இல் வட்டப்பாதையில் விண்வெளி நிலையம் – இது நம்மை பூமிக்கு அப்பால் வாழ வழிவகுக்கும்!
லங்கா4 (Lanka4)
அனுசரணை