சினிமா
சாக முடிவெடுத்தபோது காட்சியளித்த கடவுள்கள்..நடந்த அதிசயம்!! 7 ஆம் அறிவு பட நடிகர்..

சாக முடிவெடுத்தபோது காட்சியளித்த கடவுள்கள்..நடந்த அதிசயம்!! 7 ஆம் அறிவு பட நடிகர்..
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் 7 ஆம் அறிவு. இப்படத்தில் வில்லனுக்கு உதவும் நபராக ஒரு கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ராமநாதன். விளம்பரங்களுக்கு டப்பிங் கொடுத்து வரும் ராமநாதன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சாய் பாபா தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில், எனக்கு 40 வயது இருக்கும் போது தொழிலில் பெருத்த நஷ்டத்தில் கடனில் இருந்தேன். எனக்கு லட்சத்த்ல் கடன் கொடுத்தவருக்கு, கையில் இருந்த 10 ஆயிரத்தை கொடுக்கச்சென்றபோது அவர்கள் என்னை ஒரு அறைக்குள் விட்டு மூவர் சேர்ந்து அடிக்கத்தொடங்கிட்டார்கள்.நான் கரேத்தே மாஸ்டர் தமிழ்மணியிடம் கராத்தே கற்றவன் என்பதால் உடனடியாக சுதாரித்துக்கொண்டேன். அவர்கள் லைட்டை அணைத்து தாக்கும்போது நான் திருப்பி அடித்ததில் அவர்களில் ஒருவருக்கு மூக்கு உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு பல் விழுந்தது. பின் அந்த நபர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.என்னை தாக்கிய ஒருவருக்கு மனநிலை சரியில்லாத மகன் இருந்தான். கெஞ்சிக்கேட்டுக்கொண்டதால் அவர்களை காவல்துறையில் பிடித்துக்கொடுக்காமல் விட்டுவிட்டேன்.கடனால் இறந்துபோகலாம் என முடிவெடுத்த எனக்கு தற்கொலை செய்துகொள்ளும் தைரியம் இல்லை. எனவே, இரவு தூங்கும்போது விநாயகரிடம் என்னை விடிவதற்குள் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு படுத்தேன். அந்த இரவு சத்ய சாய்பாபா கனவில் வந்து, நீ தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாயா? என்று கேட்டார்.பின் பிள்ளையார், ஷீரடி சாய்பாபா, திருச்செந்தூர் முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி, இயேசு கிறிஸ்து என அனைவரும் காட்சியளித்தனர். பின் சாய்பாபா என்னை கட்டி அணைத்து, இனி கவலைப்பட வேண்டாம், தான் டப்பிங் ஆர்டிஸ்ட், மாடல், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பல முகங்களை காண்பிப்பேன் என்றும் ஆசீர்வாதம் செய்தார்.அந்த கனவுக்கு பின் எனக்கு நான் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு டப்பிங் என்றால் என்னவென்றே தெரியாது, நட்ப்பு என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியிருக்கிறார் நடிகர் ராம்நாதன்.