இலங்கை
சிறப்புரிமையை நீக்குவது அரசியல் பழிவாங்கல்; மஹிந்த குற்றச்சாட்டு!

சிறப்புரிமையை நீக்குவது அரசியல் பழிவாங்கல்; மஹிந்த குற்றச்சாட்டு!
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதத்தை நீக்குவதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனா திபதிகளுக்குரிய வரப்பிரசாதங்கள் மற்றும் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வரப்பிரசாதங்களை நீக்குவது எனக்குப் பிரச்சினை இல்லை. மக்களின் வரப்பிரசாதம் தான் எமக்கு முக்கியம். அதைவிட மேலானது எதுவும் இல்லை. மக்கள் ஆதரவு இருக்கும் வரை எந்தவொரு வரப்பிரசாதத்தை நீக்கினாலும் பரவாயில்லை. விஜேராமவில் உள்ள மாளிகையைவிட மெதலுமனவில் உள்ள வீடு சிறப்பானது- என்றார்.