சினிமா
சீரியல் யுத்தம்: சன் டிவி vs விஜய் டிவி…! டிஆர்பியில் தோற்ற நாயகன் யார்?

சீரியல் யுத்தம்: சன் டிவி vs விஜய் டிவி…! டிஆர்பியில் தோற்ற நாயகன் யார்?
தமிழ் டிவி சீரியல்கள் ரசிகர்களின் இதயத்தை எப்போதுமே கட்டி வைத்திருப்பவை. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்இவைகளை மையமாகக் கொண்டு நடைபெறும் டிஆர்பி போட்டி, வாரந்தோறும் மக்கள் எதிர்பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில், இந்த வார டிஆர்பி தரவுகள் வெளியான நிலையில், சன் டிவி சீரியல்கள் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.முதல் இடத்தில் சன் டிவியின் ‘சிங்க பெண்ணே’ சீரியல் 11.27 புள்ளிகளை பெற்று பல சீரியல்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரியவந்த பிறகு குடும்பமே அவளுக்காக களம் இறங்குகிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதைத் தேடும் பயணம், கதையின் திருப்பமாக மாறியுள்ளது. அன்புவும் ஆனந்திக்கு உறுதுணையாக இருப்பது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.இரண்டாவது இடத்தில் 10.70 புள்ளிகள் பெற்று ‘மூன்று முடிச்சு’ சீரியல் அமைந்துள்ளது. சூர்யா நந்தினிக்கு இங்கிலீஷ் கத்து கொடுத்து, சுந்தரவல்லிக்கு எதிராக நிப்பாட்ட செய்ய முயற்சிக்கிறார். ஆனால் மாதவி ஏற்படுத்தும் குழப்பங்கள், கதையை இன்னும் சுவாரசியமாக மாற்றியுள்ளது. கல்யாணம் மூலம் இந்த உண்மை வெளிவர, சூர்யா நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதே எதிர்பார்ப்பை கூட்டுகிறது.மூன்றாவது இடத்தில் ‘கயல்’ (9.33), நான்காவது இடத்தில் ‘எதிர்நீச்சல்’ (9.02), ஐந்தாவது இடத்தில் ‘அன்னம்’ (8.65), ஆறாவது இடத்தில் ‘மருமகள்’ (8.51) ஆகிய சீரியல்கள் நீங்கா இடத்தை பிடித்துள்ளன.எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் திடீர் வருகையை கொடுக்கும் விஜய் டிவியின் ‘சிறகடிக்கும் ஆசை’ சீரியல், இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளது. 8.04 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வார டிஆர்பி தரவுகள், “சீரியல் என்றாலே சன் டிவிதான்” என்ற நிலையில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கதையின் திருப்பங்கள், குடும்ப மற்றும் உணர்ச்சி காட்சிகள் காரணமாக சன் டிவி சீரியல்கள் ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்றுவருகின்றன.