இலங்கை
செருப்பு, தாயத்துடன் என்புத்தொகுதிகள் மீட்பு!

செருப்பு, தாயத்துடன் என்புத்தொகுதிகள் மீட்பு!
அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து செருப்புடனும், தாயத்துடனும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணிப் புதைகுழிக்குள் செருப்புடனும், தாயத்துடனும் என்புத்தொகுதிகள் நேற்றுமுன்தினம் அவதானிக்கப்பட்டிருந்தன. அந்த இரண்டு என்புத் தொகுதிகளுமே தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து நேற்று மீட்கப்பட்டன. அத்துடன், தாயத்து, நாணயம் உள்ளிட்ட சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவை நீதிமன்றக் கட்டுக்காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.