இலங்கை
சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துக; அவரது சகோதரி கோரிக்கை!!

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துக; அவரது சகோதரி கோரிக்கை!!
சோமரத்ன ராஜபக்சவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரது சகோதரியான ரோஹிணி ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
செம்மணி தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயார் என்று சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விவரங்களை வெளியிடுவதற்குத் தயாராக உள்ளார் என்று அவரது மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் எனது சகோதரருக்கு இதனால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றார்.