இலங்கை
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா இன்று அவசர சந்திப்பு!!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா இன்று அவசர சந்திப்பு!!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் எழுத்து மூல அவசர வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா இன்று (07.08.2025) அவர்களுடன் அவசரமாகச் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த முக்கிய தேவைகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பில் தமிழர்களின் உரிமைகள், அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் சமீபத்திய அரசியல் நிலைமை போன்றவை கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
லங்கா4 (Lanka4)
அனுசரணை