இலங்கை
நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, நிட்டம்புவ கந்தஹேன, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த , கோலவத்த, கொரகதெனிய ரணபொக்குனகம, படலிய, அத்தனகல்ல, பஸ்யால, உராபொல, திக்கந்த, மிவிட்டிகம்மன, மாஹிம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவல, கல்லபிட்டிய மற்றும் எல்லமுல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.