சினிமா
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு…! என்ன காரணம் தெரியுமா?

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு…! என்ன காரணம் தெரியுமா?
இரு சமூகத்தினர் இடையே மோதலைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாகக் கூறி, பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகள் கோபி மற்றும் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க கோவை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கோவைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இன்று (ஆகஸ்ட் 7) கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று இந்த புகாரை அளித்தார். இதில், ‘பரிதாபங்கள்’ எனும் யூடியூப் சேனல் தனது சமீபத்திய வீடியோவின் மூலம் இரு சமுதாயத்தினர் இடையே பகைமையை உண்டாக்கும் வகையில் கருத்துகளை பரப்பி வருவதாகவும், இது சமாதானமிக்க சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சமூக நலனுக்கும், சட்ட ஒழுங்குக்கும் எதிரான வகையில் செயல்படும் இந்த வகை உள்ளடக்கங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கிக் கொள்வதோடு, கோபி மற்றும் சுதாகர் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக காவல் துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பகைமை தூண்டும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த புகார் முக்கியத்துவம் பெறுகிறது.