சினிமா
“புல்லட்” திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியீடு…!படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

“புல்லட்” திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியீடு…!படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அடுத்த படமான ‘புல்லட்’ மூலம் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘காஞ்சனா’ திரைப்பட தொடர்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இவர் நடித்திருக்கும் புல்லட் திரைப்படம், முழுக்க முழுக்க வித்தியாசமான படைப்பாக உருவாகி வருகிறது.இந்தப் படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடித்த ‘டைரி’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘புல்லட்’ படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் பணியாற்றியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கதாநாயகியாக வைஷாலி ராஜ் நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் டீசர் நாளை மாலை வெளியாகவுள்ளது.படக்குழுவினர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இந்த டீசரை நடிகர் விஷால் வெளியிடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புல்லட், சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.