சினிமா
பூணூல் இருக்கானு முதுகை தடவி பார்ப்பாங்க.. சினிமா ஜாதியை பற்றி பகிர் கிளப்பிய பயில்வான்

பூணூல் இருக்கானு முதுகை தடவி பார்ப்பாங்க.. சினிமா ஜாதியை பற்றி பகிர் கிளப்பிய பயில்வான்
பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபத்தில் பட்டிலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.பிக்பாஸ் பிரபலமும் மாடல் அழகியுமான மீரா மிதுன், தமிழ் சினிமாவில் உள்ள பட்டிலினத்தவர்களை சேர்ந்த இயக்குநர்களையும் நடிகர், நடிகைகளையும் பற்றி ஜாதி வெறியுடன் சமீபத்தில் பேசி இருந்தார். இவருடைய வீடியோ வைரலானதை தொடர்ந்து இவர் மீது காவல் நிலையங்களில் புகார் பதிவானது.குறித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் ஜாதி மதம் குறித்து பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.அதன்பின்பும் போலீசாருக்கு சவால் விடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தலைமறைவானார் மீரா மிதுன். சுமார் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுனை தற்போது ஆகஸ்ட் 11ம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் மீரா மீதுன் சொல்வது போலவே சினிமாவில் ஜாதி பார்க்கப்படுகின்றது என்று சர்ச்சையை கிளப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதர். அதன்படி அவர் கூறுகையில்,திரைத்துறையில் ஜாதி பார்க்க இல்லையென சொல்ல மாட்டேன். ஜாதி இருக்கிறது. பட்டியலினத்தை சேர்ந்த இயக்குநர்களும் நடிகர்களும் அவர்களுடைய ஜாதியை சேர்ந்தவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகளை வழங்குகின்றார்கள்.இவ்வாறு மதுரையைச் சேர்ந்த இயக்குநர்கள் அவர்களுடைய ஜாதியை சேர்ந்தவர்களுக்கு தான் வாய்ப்பை கொடுக்கின்றார்கள். அதைப்போலத்தான் ஐயங்கார் இயக்குநர்களும் அவர்களுக்குள்ளேயே வாய்ப்புக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.பிரபல இயக்குநர் விசு கூட முதுகில் கை போட்டு பூணூல் இருக்கா என்று பார்த்து தான் தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கின்றார்.எனவே சினிமாவில் ஜாதி பாகுபாடு என்பது இருக்கின்றது என பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.