இலங்கை
பொய்யான முறைப்பாடு ; பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை

பொய்யான முறைப்பாடு ; பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை
பொய்யான முறைப்பாடு அளிதமைக்காக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடியை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக பொய்யான முறைப்பாடு அளித்தமைக்காக பிரியந்த ஜெயக்கொடி கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரியந்த ஜெயக்கொடி தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பொய்யாக முறைப்பாடு வழங்கயமை தெரியவந்துள்ளது.