இலங்கை
மக்கள் பணத்தில் வாழ வெட்கமாக இல்லையா; சுனில் ஹந்துன்நெத்தி காட்டம்!

மக்கள் பணத்தில் வாழ வெட்கமாக இல்லையா; சுனில் ஹந்துன்நெத்தி காட்டம்!
ஓய்வுபெற்ற பின்பும் மக்களின் நிதியில் வாழ்வதற்கும் அரச வீடுகளில் வாழ்வதற்கும் ஆசைப்படும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இது தொடர்பில் வெட்கமில்லையா? என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வுபெற்றதன் பின்வாழ்வதற்கு, குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லையா? பணம், வீடு என எவையும் இல்லையா? ஜனாதிபதி பதவி ஊடாகத்தான் சாப்பிடவேண்டுமா? நாட்டுமக்களின் நிதியில் தான் அவர்கள் வாழவேண்டுமா? ஓய்வு பெற்றதும் மக்கள் தானா அவர்களுக்குச் சோறு போட வேண்டும்? இது வெட்கப்படவேண்டிய விடயம் அல்லவா. எளிமையாக வாழ்கின்ற ஜனாதிபதி ஒருவர் இருக்கிறார். அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாவது இவர்கள் திருந்தவேண்டும். நாங்கள் ஓய்வுபெற்றால் இப்படிச் செய்யமாட்டோம். ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டோம். வெளியேறிவிடுவோம் என்றார்.