பொழுதுபோக்கு
‘மஹதி’ ராகத்தில் பாட்டு; இந்தியாவில் இதை செய்த ஒரே இசை அமைப்பாளர் இவர் தான்: ரஜினி அறிமுக படத்தில் இந்த பாட்டை கேளுங்க!

‘மஹதி’ ராகத்தில் பாட்டு; இந்தியாவில் இதை செய்த ஒரே இசை அமைப்பாளர் இவர் தான்: ரஜினி அறிமுக படத்தில் இந்த பாட்டை கேளுங்க!
தமிழ் சினிமாவில் தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னணி நடிகர்கள், இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ள நிலையில், இந்தியாவில் யாரும் செய்யாத ஒரு அரிய சாதனையை செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் தனது மெல்லிசையினால் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி தொடக்கத்தின் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்து வந்தார். இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த போதும் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், எம்.எஸ்.வி தனியாக தனது பெயரை நிலைநாட்டினார்.டி.கே.ராமமூர்த்தி பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் எம்.எஸ்.வி அளவுக்கு பிரபலமாகவில்லை. பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர், சிவாஜி என மாறி மாறி ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு எம்.எஸ்.வி தான் இசையமைத்தார். அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் அபூர்வ ராகங்கள். இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற நடிகர் அறிமுகமானார்.கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, எம்.எஸ்.வியை சந்தித்த கே.பாலச்சந்தர், அபூர்வ ராகங்கள் என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கிறேன். இந்த படத்தில் இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகத்தில் ஒரு பாடைலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி என்ன செய்வது என்று தெரியாமல், தனது குருநாதர், மானசீக குரு, பாலமுரளி கிருஷ்ணாவிடம் சென்று, இதை சொன்னேன்.இதை கேட்ட அவர், அந்த மாதிரி ஒரு ராகத்தில் உங்களால் மட்டும் தான் பாடல் போட முடியும்.3 நோட்ஸ், 4 சுரங்களில், ஒரு ராகம் சிருஷ்டி பண்ணுங்க, அந்த ராகத்திற்கு பெயர் மஹதி. அந்த ராகத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர் என் சங்கீத குரு, பாலமுரளி கிருஷ்ணா. இந்த பெருமை அவருக்கு தான் போய் சேரும் என்று கூறியுள்ள எம்.எஸ்.வி, அந்த பாடல், அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் அதிசய ராகம், ஆனந்த் ராகம் என்ற பாடல். இந்த ராகத்தில் இந்தியாவில் பாடல் போட்ட ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.