இலங்கை
யாழில் 16 வயதுச் சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வீட்டுக்குள் புகுந்து அடாவடி

யாழில் 16 வயதுச் சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வீட்டுக்குள் புகுந்து அடாவடி
யாழ் பருத்தி்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 16 வயதுச் சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த கும்பலுடன் வந்து தமது வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியதாகவும் அது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்ட போது குறித்த கும்பலை கூட்டி வந்தவர்களை கைது செய்து பின்னர் விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்வில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.