இலங்கை
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபிரிக்க நாடொன்றில் என்ற நாட்டில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் விமானம் மூலம் கட்டுநாயக்கவுக்குத் திரும்பியவர்கள். எனவே வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட செயற்றிட்டங்களை ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் முன்னெடுத்தல் அவசியம் – என்றுள்ளது.