இலங்கை
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது; ஜனாதிபதி அநுர

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது; ஜனாதிபதி அநுர
நாட்டில் வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (7) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை அமெரிக்கா இலங்கை மீது விதித்த வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறுகையில்,
இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20% வீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிகா விதித்த வரியை மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (7) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவுடன் இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக வரி 20% வீதமான குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.