பொழுதுபோக்கு
விக்ரம், லியோக்கு முன்னாடி; தமிழ் சினிமா முதல் அறிவிப்பு வீடியோ விட்டது நாங்கதான்: வெங்கட் பிரபு

விக்ரம், லியோக்கு முன்னாடி; தமிழ் சினிமா முதல் அறிவிப்பு வீடியோ விட்டது நாங்கதான்: வெங்கட் பிரபு
சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், எதிர்பார்ப்பை அதிகரிக்கவும், முதல் அறிவிப்பு (ஃபர்ஸ்ட் லுக்), டீசர், டிரைலர், பாடல் வெளியீடுகள் என பல வழிகள் உள்ளன. ஆனால், ஒரு படத்தின் அறிவிப்புக்காகவே தனியாக ஒரு வீடியோவை வெளியிடும் வழக்கம் சமீப காலங்களில் தான் பரவலாக அறியப்பட்டது. இயக்குநர் வெங்கட் பிரபு நேர்க்காணல் ஒன்றில் தற்போதைய ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களுக்கு முன்பாக, ‘மங்காத்தா’ படத்திற்காகத்தான் தமிழ் சினிமாவில் முதல் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டதாகக் கூறியுள்ளார்.விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிவிப்பு வீடியோ, லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால், இந்த அறிவிப்பு வீடியோ பாணியை, மங்காத்தா படக்குழுவினர் ்தான் முதன்முதலில் தொடங்கி வைத்ததாக வெங்கட் பிரபு பெருமையுடன் குறிப்பிடுகிறார். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய பெருமை மங்காத்தா படத்திற்கு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.2011-ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’, அஜித்தின் 50-வது படமாக அமைந்தது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவில், அஜித்தின் 50-வது படம், வெங்கட் பிரபு இயக்கம், யுவன் ஷங்கர் ராஜா இசை என ரசிகர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஸ்டைலாக வெளியிட்டனர். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா. அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு. https://www.facebook.com/share/v/1Z4fL9wL2B/