இலங்கை
ஹேமச்சந்திர புலிகளுடன் தொடர்பாம்

ஹேமச்சந்திர புலிகளுடன் தொடர்பாம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சரான அருண் ஹேமச்சந்திரவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாடு அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு வெளியில்தான் இருந்தனர். ஆனால், தற்போது அரசாங்கத்துக்கு உள்ளேயே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர். அவ்வாறானதொரு நபர்தான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பரப்புரையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்துகொண்டார்.
இதன்போது,பிரபாகரனுக்குச் சிலை அமைக்கப்படும் என்று இவரே தெரிவித்திருந்தார். அந்தப் பரப்புரையில் புலிகளின் பாடல்களுக்கு நிகரான பாடல்கள் உருவாக்கப்பட்டிருந்தன. எனவே, அரசாங்கத்துக்கு வெளியே அல்ல உள்ளே தான் தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர். அதனால்தான் படையினர் கொடூரமாகப் பழிவாங்கப்படுகின்றனர் – என்றார்.