இலங்கை
ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் ரிவோல்வர் மீட்பு!

ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் ரிவோல்வர் மீட்பு!
கம்பஹா, கெஹெல்பத்தர, சியனே வீதி காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் உள்ள காணியில் இருந்தே இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மேலதிக விசாரணைகளுக்காக கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.