Connect with us

பொழுதுபோக்கு

12-ம் வகுப்பு ஃபெயில் ஆன மாணவன்; எங்க அப்பா எனக்கு காட்டிய‌ ரூட் இது; மனம் திறந்த பா.விஜய்!

Published

on

Screenshot 2025-08-07 133237

Loading

12-ம் வகுப்பு ஃபெயில் ஆன மாணவன்; எங்க அப்பா எனக்கு காட்டிய‌ ரூட் இது; மனம் திறந்த பா.விஜய்!

வித்தகக் கவிஞர் என்று போற்றப்படும் பா.விஜயின் பூர்வீகம் கும்பகோணம். பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில். அப்பா பாலகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர். அம்மா சரஸ்வதி, ஆசிரியை. சிறு வயதிலேயே விஜயை எழுத்தார்வம் ஆட்கொண்டு விட்டது. படிப்பு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது. பிளஸ்டூவில் தோல்வியடைந்து மனம் ஒடிந்து நின்ற விஜயை அவரது அப்பா தேற்றினார். ‘‘படிப்பு போனாப் போகட்டும்… உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே. அதுல உன்னை வளர்த்துக்கோ…’’ என்று அவரது தந்தை கூறியுள்ளாராம். அந்த வார்த்தைகள் விஜயை உந்தித் தள்ளின. நன்றாக எழுத வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மையான இலக்கியங்கள், இலக்கண நூல்களை எல்லாம் தீவிரமாக வாசித்தார். கவிதைகளை எழுதிக் குவித்தார். விஜயின் தீவிரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்த அவரது தந்தை, மீண்டும் உற்சாகத்தைப் பற்ற வைத்தார்.விஜய் அந்த வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இயக்குனர் பாக்யராஜ், விஜய்க்கு திரையுலக வாசலைத் திறந்து விட்டார். பாக்யராஜ் உடனான ஒரு சந்திப்பில், தாஜ்மஹாலைப் பற்றி, நீரோ மன்னனைப் பற்றி, கஜினியைப் பற்றியெல்லாம் பேசி பிரமிப்பூட்டினார். விஜயின் இலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் கணித்த பாக்யராஜ், விஜய்க்கு பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தான் இசையமைத்து நடித்த “ஞானப்பழம்” படத்திலேயே முதல் பாடலை எழுதும் வாய்ப்பையும் வழங்கினார்.‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக தேசிய விருது வாங்க டெல்லி சென்ற விஜய், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமை, குடும்பத்தோடு சந்தித்துப் பேசினார். அப்போது, விஜயையும், அவரது மனைவியையும் இணைந்து அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பிறகு, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது…’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப்பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் பா.விஜய்.இதுவரை 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் பா.விஜய். ‘இளைஞன்’ படத்தில், “தோழா… வானம் தூரம் இல்லை”, ‘ஏழாம் அறிவு’ படத்தில், “இன்னும் என்ன தோழா” என விஜய் எழுதிய பல பாடல்கள் இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றுபவை.இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் திரை துறையில் நுழைந்த போது கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் எழுத்தாளர் வாலியும் தான் ஜாம்பவான்களாம். ஆவணர்களை தாண்டி பேனாவை தொட கூட முடியாது என்று கூறியுள்ளார். இவருக்கு இளையராஜா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரை சந்திப்பதற்கும் கடினமான முயற்சிகள் எடுத்துள்ளார் ஆனால் அனைத்தும் வீணாகி கடைசியில் நந்தா பட பாடலை பாடுவதற்காக இசைஞானி வந்திருக்கிறார். அப்போது தான் முதல் முதலில் நேர்ல இளையராஜாவை பார்த்தாராம் விஜய். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டதும் விஜயின் தனித்துவங்களில் ஒன்று. அந்த நூல் வெளியீட்டு விழாவின்போது, விஜய்க்கு ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் வழங்கினார் கருணாநிதி. ஒரு விழாவில், கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய்” என்று குறிப்பிட்டுப் பாராட்டியதும் குறிப்பிடத்தகுந்தது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன