சினிமா
24 வயதில் முதல் திருமணம்..கணவரை பறித்த எமன்!! 2 முறை விதவையான டாப் நடிகை..

24 வயதில் முதல் திருமணம்..கணவரை பறித்த எமன்!! 2 முறை விதவையான டாப் நடிகை..
சினிமா நட்சத்திரங்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைவது கிடையாது. உச்சம் தொட்ட பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களும் இருக்கிறது. அப்படி திரையில் நட்சத்திரமாக மின்னிய நடிகை ஒருவர் ஆசை ஆசையாய் காதல் திருமணம் செயதார். ஆனால் வாழ்க்கை தொடங்கிய 11வது நாளில் இருளில் மூழ்கியுள்ளது.70, 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை லீனா சந்தவார்கருக்கு தான் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. 1968ல் வெளியான மா கா மீத் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் நடிகர் வினோத் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.அப்படி பல படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த சமயத்தில் லீனாவுக்கு சித்தார்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்தபோது லீனாவுக்கு 24 வயது. சித்தார்த், கோவாவின் முதல் முதலமைச்சரான பந்தோட்கரின் மகன் தான்.24 வயதில் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் முதலமைச்சர் மகனை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை என பல்வேறு கனவுகளுடன் திருமணம் செய்தார் லீனா. கல்யாணம் முடிந்த 11வது நாளில் லீனாவின் கண்வர் சித்தார்த் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக வெடிக்க, சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க உயிரிழந்தார்.திருமணமாகி 11வது நாளிலேயே லீனா விதவையானார். இதனால் லீனா மீது பழியும் ராசியில்லாதவர் என்றும் வசை சொற்களால் முடங்கினார். மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய லீனா, பைராக் என்ற படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து தோல்வியை கண்டார். அந்த சமயத்திஒல் பாடகர் மற்றும் நடிகர் கிஷோர் மீது காதல் ஏற்பட்டது.20 வயது மூத்தவர், 3 முறை விவாகரத்தானர் என்பதால் இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டும் அந்த திருமணம் லீனாவுக்கு நிலைக்கவில்லை. 7 ஆண்டுகள் கிஷோர் குமாருடன் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் லீனா.1987ல் கிஷோர் குமார் உயிரிழந்த போது லீனா 37 வயதில் மீண்டும் விதவையானார். தற்போது 74 வயதாகும் லீனா தன் மகன்களுடன் வசித்தும் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.