இலங்கை
அஸ்வெசும- 2ஆம் கட்டத்துக்கு வங்கிக் கணக்கை ஆரம்பிக்குக
அஸ்வெசும- 2ஆம் கட்டத்துக்கு வங்கிக் கணக்கை ஆரம்பிக்குக
தென்மராட்சிப் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்குமாறு பிரதேசசெயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஆம் கட்ட நலன்புரித் திட்டத்துக்கு ஆயிரத்து 600க்கு மேற்பட்ட பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கம் அனுப்புவதற்கு உடனடியாக அரசு வங்கியொன்றில் கணக்கினை ஆரம்பித்து இலக்கம் வழங்கப்படவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
