Connect with us

இந்தியா

இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக 1.5 லட்சம் அபராதம்!

Published

on

Loading

இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக 1.5 லட்சம் அபராதம்!

இண்டிகோ நிறுவனத்துக்கு ரூபா 1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிங்கி என்ற பெண், கடந்த ஜனவரி இரண்டாம் திகதி அஜர்பைஜானின் பகு நகரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

Advertisement

இதன்போது, தனக்கு அசுத்தமான மற்றும் கறைபடிந்த இருக்கை வழங்கப்பட்டதாகவும் இதற்காக வழங்கிய தனது புகார் புறக்கணிக்கப்பட்டதாகவும் சரியாக விசாரிக்கப்படவில்லை எனவும் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

டில்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயம் கமிஷனில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ள இண்டிகோ நிறுவனம், பிங்கி புகார் தெரிவித்ததும் அவருக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும் அதில் அவர் பயணித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

இதனை விசாரித்த கமிஷன் தலைவர் பூனம் சவுத்ரி, உறுப்பினர்கள் பாரிக் அஹமது மற்றும் சேகர் சந்திர ஆகியோர் கொண்ட அமர்வு, பிங்கியின் புகாருக்கு ஆதாரம் உள்ளது என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூபா 1.5 லட்சம் அபராதம் விதித்ததுடன் மேலும் வழக்கு செலவாக ரூபா 25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன